திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(30). இவர் தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகிறார். அவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு, யாருமில்லாத சூழல் பார்த்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது - dindigul district news
திண்டுக்கல்: அய்யம்பாளையத்தை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முத்துராஜ்
இதையடுத்து சிறுமி தனது தாயாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே இதுகுறித்து சிறுமையின் தாய் மஞ்சுளாதேவி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் முத்துராஜை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கேட்பாரற்று கிடந்த நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்