திண்டுக்கல்: திண்டுக்கல் காவல் துறையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பது, அதனைத் கையாளுவது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்காக ‘தோழி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களின் வீடுகளுக்கே சென்று பேசி நம்பிக்கையை விதைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்நிலையில் ’தோழி’ திட்டத்தின்கீழ் 24 மடிக்கணினிகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை இன்று (ஜூலை 31) பெண் காவலர்களுக்கு வழங்கப்பட்டன.