தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குப் பல்வேறு வகைகளில் மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, பல இடங்களில் மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவிலிருந்து ரயில் மூலம் தமிழ்நாட்டிற்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக ரயில்வே காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்று (மே 31) கர்நாடக மாநிலத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்ற அனைத்து ரயில்களிலும் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.