திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த ஏனோக் எபினேசர் என்னும் மாணவன் அரசு பள்ளியில் 2018ஆம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஒரு வருடமாக கோயம்புத்தூரில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எதிர் கொண்ட இவர் தேர்ச்சி பெற்றார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வில் கொடைக்கானலை சேர்ந்த மாணவனுக்கு பிடிஎஸ் (BDS) துறை கிடைத்துள்ளது. கொடைக்கானலில் தான் படித்த பள்ளிக்கு வந்த மாணவன், ஆசிரியர்களை சந்தித்தது இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளையும் பெற்று கொண்டார்.
பல் மருத்துவத்தில் இடம் பிடித்த கொடைக்கானல் மாணவன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணவன், மருத்துவ துறையில் 7.5 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை பயப்படாமல் எதிர்கொள்ள வேண்டும், மேலும் இத்தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினம் கிடையாது” என்றார்.
கொடைக்கானல் அரசு பள்ளி மாணவன் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ துறையில் இடம் கிடைத்தது. அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு கூடுதலாக ஒரு வாரம் பிணை நீட்டிப்பு - உச்ச நீதிமன்றம்