திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் தற்போது அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர். கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க தற்போது பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல், அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தங்கும் அறைகளில் தங்கி கொடைக்கானலை ரசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், சில இடங்களில் செயல்பட்டு வரும் அனுமதியற்ற தங்கும் விடுதிகளில் தங்கும் அறைகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளனர்.இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடும் அனுமதியற்ற தங்கும் விடுதிகளின் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் , மேலும் தங்கும் விடுதிகளில் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.