திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலையில் உள்ள குருசரடி பகுதியில் 2018ஆம் ஆண்டு கஜா புயலில் மண்சரிவு ஏற்பட்டு பாதை துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை கொண்டு பாலமும் சாலையும் சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இந்த சாலையில் அதிக வாகனங்கள் வந்து செல்வதால் மணல் மூட்டைகள் சரிந்து விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அடுக்கி வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் மற்றும் எம் சேண்ட் மூட்டைகள் வெயிலின் தாக்கத்தால் கிழிந்து வலுவிழந்து காணப்படுகிறது.