தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் வேறு மாநிலத்தவர்களை அனுமதிக்கக் கூடாது: மக்கள் வேண்டுகோள்! - kodaikanal People reqest to other peoples should not allowed

திண்டுக்கல்: வேறு மாநிலத்தவர்களை கொடைக்கானலுக்கு அனுமதிக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

கோடைக்கானலில் வேறு மாநிலத்தவர்களை அனுமதிக்க கூடாது: மக்கள் வேண்டுகோள்!
கோடைக்கானலில் வேறு மாநிலத்தவர்களை அனுமதிக்க கூடாது: மக்கள் வேண்டுகோள்!

By

Published : May 6, 2020, 12:31 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதித்து 33 பேர் உயிரிழந்தும், நான்காயிரத்திற்கும் அதிகமானோர் பாதித்தும் உள்ளனர்.

கோடைக்கானலில் வேறு மாநிலத்தவர்களை அனுமதிக்க கூடாது: மக்கள் வேண்டுகோள்!

இதில் சுற்றுலா த‌ல‌மான கொடைக்கான‌லில் கரோனா ஆர‌ம்பித்த‌ நாள் முத‌ல் இங்குள்ள‌ அனைத்து அர‌சு துறைக‌ள், தன்னார்வ‌ல‌ர்க‌ள், பொது ம‌க்க‌ளின் உத‌வியுட‌ன் இதுவ‌ரை கரோனா நோயாளிக‌ள் இல்லாத‌ ந‌க‌ர‌மாக‌ இருந்துவருகிறது.

ஆனால் த‌ற்போது கோடை கால‌ம் ஆர‌ம்பித்துள்ள‌தால் இங்குள்ள தனியார் விடுதி உரிமையாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் ப‌ல‌ரும் சிறப்பு அனும‌தி பெற்று கொடைக்கானல் வருவதற்கு முய‌ற்சி செய்து வ‌ருகின்றனர். இதனால் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை வேறு பகுதி, மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வருவதை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது என கொடைக்கான‌ல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இதையும் படிங்க...ஜம்முவில் உயிரிழந்த தமிழ்நாடு ராணுவ வீரர்: உடல் சொந்த ஊருக்குவருவதில் தாமதம்!

ABOUT THE AUTHOR

...view details