திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதியான கலையரங்கத்தில், நகராட்சியின் வாகன நிறுத்தம் உள்ளது. மேலும் அங்கு பல்வேறு உணவு விடுதிகளும் உள்ளன. இந்த உணவு விடுதிகளில் கழிவுநீர் செல்வதற்கு முறையாக வழி இல்லாமல் இருந்து வருவதால், கழிவுநீர் அனைத்தும் சாலைகளில் செல்கிறது.
அதேநேரம் அப்பகுதியில் அமைந்துள்ள நகராட்சியின் கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால், கழிவுநீர் தொட்டிகள் அனைத்தும் சேதமடைந்து திறந்த வெளியில் காணப்படுகிறது. இதனால் கலையரங்கம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் சேர்ந்து பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.