தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உக்ரைனில் சிக்கிய கொடைக்கானல் மாணவி வீடியோ வெளியீடு - கொடைக்கானல் மாணவி வீடியோ வெளியீடு

உக்ரைன் மீது ர‌ஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கிய கொடைக்கான‌ல் மாண‌வி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொடைக்கானல் மாணவியின் வீடியோ
கொடைக்கானல் மாணவியின் வீடியோ

By

Published : Feb 24, 2022, 7:36 PM IST

Updated : Feb 24, 2022, 7:42 PM IST

திண்டுக்கல்:உக்ரைன் மீது ர‌ஷ்யா போர் தொடுத்து வருவதால், அங்கு மிக‌ப் ப‌த‌ற்றமான‌ சூழ்நிலை நில‌வி வ‌ருகிற‌து. இத‌னால், அங்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள், தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் த‌வித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு தொலைதொட‌ர்பு துண்டிக்க‌ப்பட்டுள்ள‌தால், அங்குள்ள மாணவர்களின் நிலை தெரியாமல் பொற்றோர்க‌ள் தவித்து வருகின்றனர்.

உக்ரைன் நாட்டில் கொடைக்கான‌ல் மாண‌வி உள்ப‌ட‌ 200-க்கும் மேற்ப‌ட்ட‌ இந்திய மாண‌விகளை மீட்க‌ ஒன்றிய‌ அர‌சு, த‌மிழ்நாடு அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற கொடைக்கானல் மாணவி பார்க‌வி, ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தாங்கள் நலமாக இருப்பதாகவும், பெற்றோர் கவலைகொள்ள வேண்டாம் என்றும்; கூடிய விரைவில் அனைத்தும் சரியாகிவிடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் மாணவியின் வீடியோ

மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள அனைத்து இந்திய மாணவர்களையும், இந்திய அரசு விரைவில் மீட்டு இந்தியா அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரஷ்யாவின் 5 விமானங்கள், 1 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது; உக்ரைன்

Last Updated : Feb 24, 2022, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details