தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காய்கறி வண்டி வாங்க மானியம் - dindigul

திண்டுக்கல்: காய்கறி வண்டி வாங்க ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என கொடைக்கானல் தோட்டக்கலை இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

maaniya thittam
maaniya thittam

By

Published : Jul 21, 2021, 11:06 PM IST

இதுகுறித்து, கொடைக்கானல் தோட்டக்கலை இணை இயக்குனர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்ம், ”திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தோட்டக்கலை துறை மூலம் ஏராளமான மானிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் மானியம் வழங்க ரூ.2.98 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் ரக காய்கறி விதைகள் பரப்பு விரிவாக்கத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம், அவகோடா மற்றும் பழக் கன்றுகள் நடவு செய்ய ரூ.5,760 முழு மானியம், லிட்சி பழ சாகுபடிக்கு ரூ.5,760, கிவி ரூ. 12 ஆயிரம், ஸ்ட்ராபெரி ரூ.44 ஆயிரத்து 800 மானியம், கொய்மலர் சாகுபடிக்கு ச.மீ.,க்கு ரூ.305, மிளகு சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.800 நாற்றுடன் மானியம் அளிக்கப்படும்.

பசுமைக்குடில் அமைக்க ஆயிரம் ச.மீ.,க்கு ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மானியம் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.1,600 தேனீ வளர்ப்புக்கு பெட்டி மானியம் வழங்கப்படும். சிப்பம் கட்டும் அறை ரூ. 2 லட்சம், வெங்காய சேமிப்பு குடோனுக்கு ரூ.87 ஆயிரத்து 500 மானியம் உள்ளது.

நடமாடும் காய்கறி வண்டி வாங்க ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இதற்கு உழவன் செயலி மூலமாக பதிவு செய்யலாம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details