தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கரோனவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் அச்சம் நிலவி வருகிறது.
கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் தமுமுகவினர் - Dindigul district news
திண்டுக்கல்: கொடைக்கானலில் கரோனவால் இறந்தவர்களின் உடல்களை தமமுகவினர் அடக்கம் செய்து வருவது பொதுமக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.
கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம்செய்யும் தமுமுகவினர்
ஆனால் இதனை பொருட்படுத்தாமல் உயிரை பணயம் வைத்து கொடைக்கானலில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
எந்தவித பாகுபாடின்றி அவரவர் மத முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர். இவர்களின் இந்தச் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.