கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெயிலும், மாலையில் குளிரும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையிலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தும் வருகின்றனர்.
கோக்கர்ஸ் வாக் பகுதி: மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்! - Dindigul District News
கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் மேக கூட்டங்களுக்கு நடுவே ரம்மியமாக காட்சியளித்த மலை முகடுகளை சுற்றுலாப்பயணிகள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
கோக்கர்ஸ் வாக் பகுதி
குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக கோக்கர்ஸ் வாக் பகுதியில் இன்று (மார்ச்4) மேக கூட்டங்களுக்கு இடையே மலை முகடுகள் ரம்மியமாக காட்சி அளித்ததால் அவை சுற்றுலாப் பயணிகளை மெய் சிலிர்க்க வைத்தது. சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்லிடப்பேசியில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021; அரசியல் கட்சிகளின் கூட்டணி நகர்வுகள் உடனுக்குடன்!