திண்டுக்கல் : கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கரோனா இரண்டாம் அலையின் காரணமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இ-பதிவு முறை சற்று எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கொடைக்கானலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.