திண்டுக்கல்:கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் கைரவ் கிருஷ் சிலம்ப கலையின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக சிலம்பம் கற்று வந்துள்ளார். தொடர் பயிற்சியால் ஒற்றைக்கம்பு சுற்றுதல், இரட்டைக் கம்பு சுற்றுதல், கோடாரி, வேல் கம்பு, கண்டன் கோடாரி உள்ளிட்ட 16 சிலம்பக் கலைகளை 15 நிமிடத்தில் செய்து 9 வயது பள்ளி மாணவன் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கொடைக்கானல் சிறுவன் ’இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை - dindigul
கொடைக்கானலில் 15 நிமிடத்தில் 16 சிலம்ப கலைகள் செய்து பள்ளி மாணவன் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்தார்
கொடைக்கானல் சிறுவன் ’இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை!!
அவருக்கு சிலம்ப பயிற்சியாளர் வடிவேல் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெட்ரோல் வெடிகுண்டு:தங்களுக்கு தாங்களே விளம்பரத்திற்காக வீசியிருப்பின் கடும் நடவடிக்கை - தென் மண்டல ஐஜி எச்சரிக்கை