ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 2019 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பழனி அடிவாரம் பகுதியில் உள்ள பாத விநாயகர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார் கார்த்தி சிதம்பரம்.
'தமிழனை யாராலும் அசைக்க முடியாது..!' - கார்த்தி சிதம்பரம்
திண்டுக்கல்: "தமிழன் என்றொரு இனமுண்டு.. அவனுக்கென்று ஒரு குணமுண்டு என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது" என்று, சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம்
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'தமிழன் என்றொரு இனமுண்டு, அவனுக்கு என்று தனி குணம் உண்டு என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தெளிவுப்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.