தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கபசுரக் குடிநீருடன் நடந்த இஸ்லாமிய திருமணம் - கரோனா வைரஸ் தொற்று காரணமாக கபசுரக் குடிநீர்

திண்டுக்கல்: பழனியில் பிரியாணி விருந்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாமியர் வீட்டு திருமணம் கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கபசுரக் குடிநீருடன் நடைபெற்றது.

marriage
marriage

By

Published : Apr 4, 2020, 9:16 AM IST

பழனியில் பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்துவரும் ஷபானா பர்வீன், முகமது அசாருதீன் இருவருக்கும் திருமணம் நடத்த குடும்பத்தினர் இரண்டு மாதங்களுக்கு முன்பு முடிவெடுத்து ஏற்பாடுகளை கவனித்துவந்துள்ளனர். பழனியில் தனியார் திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டு, 500க்கும் மேற்பட்ட உறவினர்கள் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரியாணி விருந்துடன் தடபுடலாக திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்துவந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் நிச்சயிக்கப்பட்ட நாளில் இந்த ஜோடிக்கு திருமண மண்டபத்தில் வைத்து பிரியாணி விருந்துடன் திருமணம் நடத்த முடியாத நிலையில், பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 10 பேர் மட்டும் கூடியிருந்து இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துவைத்தனர்.

திருமணத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மணமகன், மணமகளுக்குக் கபசுரக் குடிநீரை வழங்கினர். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உறவினர்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. தடபுடலாக பிரியாணி விருந்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்ச்சி 144 தடை உத்தரவு காரணமாக, கபசுரக் குடிநீருடன் நிறைவடைந்தது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டிய சமூகப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதால், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை அதே நாளில் குறைந்தளவு உறவினர்களை வைத்து நடத்தியதாக மணமக்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details