தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக தலைமையே நியாயமா..?  திண்டுக்கல்லில் போஸ்டரால் பரபரப்பு... - திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பாளையம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரால் அதிருப்தி அடைந்த திமுகவினர் போஸ்டர் வாயிலாக தங்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

திமுக தலைமையே நியாயமா? திண்டுக்கல்லில் போஸ்டரால் பரபரப்பு
திமுக தலைமையே நியாயமா? திண்டுக்கல்லில் போஸ்டரால் பரபரப்பு

By

Published : Sep 19, 2022, 9:55 AM IST

திண்டுக்கல்: குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழனிசாமி. திமுகவை சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து சக திமுக நிர்வாகிகளை மதிக்காமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. அதோடு பதவிகள் பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கிறது என்றும் உழைத்தவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அப்பகுதி திமுகவினர் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் பேரூர் கழக செயலாளர் பதவியும் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வழங்காமல் பணம் கொடுத்த கதிரேசன் என்பவருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

திமுகவில் 20 ஆண்டுகளாக பேரூர் கழகச் செயலாளராக பணியாற்றி வரும் சம்பத் என்பவரை எதிர்த்து தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர் கதிரேசன். கட்சிக்கு எதிராக செயல்பட்ட கதிரேசனுக்கு பேரூர் கழகச் செயலாளர் பதவி வழங்கியது திமுக என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைமையே நியாயமா? திண்டுக்கல்லில் போஸ்டரால் பரபரப்பு

இந்த அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் திண்டுக்கல், எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாறை, பாளையம் பகுதிகளில் திமுக தலைமையே நியாயமா? கட்சிக்கு உழைத்தவர்களுக்கு எந்த பதவியும், பயனும் இல்லை. கட்சியும், பதவியும், பொறுப்பும், பணம் ஏலத்தில் என்று திமுக தலைமையை தாக்கி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:திமுகவில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு

ABOUT THE AUTHOR

...view details