கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மக்கள் எங்கு சென்றாலும், சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சில இறைச்சிக் கடைகளில் அனுமதி இல்லாமலும், சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, திண்டுக்கல் நத்தம் சாலையிலுள்ள குள்ளனம்பட்டி பகுதியில் அனுமதி இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்த கறிக்கடைகளில் தாசில்தார், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தினர்.