தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Palani temple:பழனியில் மீண்டும் கும்பாபிஷேகம்?;கருவறையில் என்ன நடந்தது... விவரம் உள்ளே! - திண்டுக்கல் செய்திகள்

Palani temple: திண்டுக்கல் பழனி கோயில் கருவறைக்குள் அமைச்சர்கள் உள்ளிட்டப் பலர் நுழைந்ததால் மீண்டும் கும்பாபிஷேகத்தை மீண்டும் நடத்தவேண்டும் என பழனி கோயில் அர்ச்சக ஸ்தானிகர் சங்கத்தினரிடையே கேள்வி எழுந்துள்ளது.

Palani temple:பழனியில் மீண்டும் கும்பாபிஷேகம்;கருவறையில் என்ன நடந்தது! விவரம் உள்ளே
Palani temple:பழனியில் மீண்டும் கும்பாபிஷேகம்;கருவறையில் என்ன நடந்தது! விவரம் உள்ளே

By

Published : Jan 31, 2023, 10:11 PM IST

Palani temple:பழனியில் மீண்டும் கும்பாபிஷேகம்;கருவறையில் என்ன நடந்தது! விவரம் உள்ளே

திண்டுக்கல்அருகே பழனி முருகன் கோயில்(Palani Temple) கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 27-ம் தேதி அன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் முதல்நாளான ஜனவரி 26-ம் தேதி அன்று மாலை தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் ஆகம விதிகளை மீறி கோயில் கருவறைக்குள் உள்ளே சென்றனர்.

அப்போது, அங்கிருந்த பக்தர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. ஆகம விதி மீறல் நடந்தபோது, அங்கு இருந்த அர்ச்சகர்களில் ஒருவரான, பழனி கோயில் முக்கிய அர்ச்சகர்களில் ஒருவரும், பழனி அர்ச்சக ஸ்தானிக சங்கத்தின் தலைவருமான கும்பேஷ்வரர் குருக்கள் தற்போது, ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது:ஆகம விதிகளை மீறி கருவறைக்குள் நுழைந்தது மாபெரும் குற்றம் என்றும், அதை பார்த்துவிட்டு அமைதியாக இருந்த அர்ச்சகர்களின் செயல் தவறானது என்றும், அர்ச்சகர்களில் ஒருசிலர் பணம் என்கிற நோக்கத்தில் செயல்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது என்றும், இது மிகவும் கேவலமானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வருகிற ஆனிமாதம் பழனி கோயில் மூலவர் சிலைக்கு மீண்டும் மருந்து சாத்தப்பட்டு, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அர்ச்சகர் சங்கம் சார்பில் கூட்டம் போட்டு கலந்து பேசி அதிகாரிகளிடம் எடுத்துரைத்து செயல்படுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு சம்மதித்து அர்ச்சகர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்றும், இல்லையென்றால் கருவறையில் நடந்த உண்மைகளை பொதுவெளியில் கொண்டுவருவேன் என்றும் தெரிவித்துள்ளார். நேர்மையாக செயல்படாமல், துர்சக்திகளை வைத்து செயல்படுவது நமக்கும், நமது சமூகத்திற்கும், உலகத்திற்கும் தவறாக நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் கருவறைக்குள் நுழையும் போது கையைப் பிடித்து இழுத்து தடுத்து பிரச்னை ஏற்பட்டதால் ஊரே தெரிந்து விட்டதாகவும், ஆனாலும்‌, நம்மில் உள்ள ஒரு சிலரால் அவர்கள் கருவறைக்குள் நுழைந்துவிட்டார்கள் என்றும், எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் நல்லது நடக்க செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:கோயில்கள் பெயரில் உள்ள போலி இணையதளங்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details