தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் அருகே மழைப்பொழிவால் சோள விளைச்சல் பாதிப்பு

ஆத்தூர் தாலுகாவிற்கு உள்ளிட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், இரும்பு சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவை அதிக மழைப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிக மழைப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவிக்கும் விவசாயி.
அதிக மழைப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவிக்கும் விவசாயி.

By

Published : Jun 13, 2021, 7:59 AM IST

திண்டுக்கல்: ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் மக்காச்சோளம், இரும்புச் சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவை மானாவாரி பயிர்களாக பயிரிடப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விதைப்பு நேரத்தில் மழை இல்லாததால், சரியான விளைச்சல் இல்லாமல் கால்நடைகளுக்குத் தீவனம் வழங்கக் கூட முடியாத சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருந்தனர்.

அதிக மழைப்பொழிவால் சோள விளைச்சல் பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவிக்கும் விவசாயி

ஆனால், இந்த ஆண்டு விதைப்பு நேரத்திற்கு முன்னரே, மழை பெய்யத் தொடங்கியது. இதனால் கன்னிவாடி, வட்டபாறை, ஆத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் விதைக்கப்பட்டிருந்த சோளக் கதிர்கள் நன்றாக விளைந்திருந்தன.

தற்போது அறுவடை செய்யும் நேரத்தில் பெய்த கன மழையின் காரணமாக, சோள மணிகள் நிறமாற்றமடைந்தன.

இதனால் கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ. 50க்கு விற்ற சோளம், தற்போது கிலோ ரூ. 30க்கு விற்பனையாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் முழு ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்குத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க : டெல்டா பகுதிகளை ஏலத்தில் இருந்து விலக்குக - தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details