திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றுள்ளது. அதன் அடிப்படையில் வடமதுரை காவல் துறையினர் வடமதுரை, தென்னம்பட்டி, காணபாடி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காமாட்சி, முருகவேல், கணேஷ் ஆகிய மூவரும் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
சட்டவிரோத மது விற்பனை: திண்டுக்கல் காவல்துறை அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல்: மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 811 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல், பழனி, வேடசந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மதுபானம் விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.