விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் மநீம கூட்டணியன் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பாக பாரதி என்பவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரக்கு ஆதரவாக இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆட்டோ ரிக்ஷா சின்னத்திற்கு வாக்கு கேட்டு திறந்த வேனில் பரப்பரையில் ஈடுபட்டார்.
'ஐஜேகே உங்களுக்கு கௌரவத்தை அளிக்கும்' - ரவி பச்சமுத்து - சாத்தூரில் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து பரப்புரை
விருதுநகர்: ”வாக்காளர்களுக்கு தேவையானது இலவசப் பொருள்கள் அல்ல, கௌரவம். அந்த கௌரவத்தை இந்திய ஜனநாயகக் கட்சி உங்களுக்கு அளிக்கும்” என சாத்தூர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
சாத்தூரில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து பரப்புரை
அப்போது பேசிய அவர், "அதிமுகவினரும் திமுகவினரும் பணத்தினால் அரசியல் செய்கிறார்கள். வாக்காளர்களுக்கு இலவச பொருள்கள் கொடுப்பது கமிஷன் கொடுப்பது போன்றாகும். தேர்தலில் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் ஆனால் நல்லவர்களைப் பார்த்து வாக்களியுங்கள்.
ஓட்டுக்கு காசு வாங்குவதால் நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்காது. வாக்காளர்களுக்கு தேவையானது இலவசப் பொருள்கள் அல்ல கௌரவம். அந்த கௌரவத்தை இந்திய ஜனநாயகக் கட்சி உங்களுக்கு அளிக்கும்" என்று தெரிவித்தார்.