தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இட்லி மாவு பாக்கெட்டில் ந‌த்தை - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: கொடைக்கான‌லில் இட்லி மாவு பாக்கெட்டில் ந‌த்தை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இட்லி மாவு பாக்கெட்டில் ந‌த்தை
இட்லி மாவு பாக்கெட்டில் ந‌த்தை

By

Published : Dec 4, 2020, 10:28 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் எம்எம் தெருவில் ரெடிமேட் இட்லி மாவு தயார் செய்யப்படுகிறது. இங்கிருந்து கொடைக்கானல் பகுதி முழுவதும் உள்ள கடைகளுக்கு இட்லி மாவு பாக்கெட் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் மூஞ்சிக்கல் அருகே இருந்த கடையில் சுரேஷ் என்பவர் இட்லி மாவு பாக்கெட் வாங்கிச் சென்றார். வீட்டில் அதை பிரித்து பார்த்தபோது நத்தை ஒன்று இருந்தது. உடனே சுரேஷ் கடைக்காரரிடம் புகார் தெரிவித்தார்.

இட்லி மாவு பாக்கெட்டில் ந‌த்தை

கடைக்காரர் தனது தவறில்லை, இதற்கு ரெடிமேட் இட்லி மாவு தயாரிப்பு உரிமையார்கள் தவறு என்றார்.

இதுகுறித்து உண‌வு பாதுகாப்பு துறையின‌ர் நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மாலை நேர ஸ்நாக்ஸ்: சுவையான அரிசி மாவு முறுக்கு செய்வது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details