தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்காதலி பேச்சை கேட்டு மனைவியை கொன்ற நபர்.. திண்டுக்கல் பகீர் சமபவம்! - Husband who killed wife

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய கணவர் மற்றும் கள்ளக்காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலியின் பேச்சை கேட்டு மனைவியை கொன்ற கணவன் கைது
கள்ளக்காதலியின் பேச்சை கேட்டு மனைவியை கொன்ற கணவன் கைது

By

Published : Nov 29, 2022, 3:02 PM IST

திண்டுக்கல்: குஜிலியம்பாறை தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள அரண்மனையூரை சேர்ந்தவர் தேவி(32). இவருக்கும் பூத்தாம்பட்டியை சேர்ந்த பந்தல் போடும் தொழிலாளி ராஜசேகர்(40) என்பவருக்கும் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்து, இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் ராஜசேகருக்கு ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த சரோஜாதேவி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், இதனை அறிந்த தேவி ராஜசேகரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தேவி வடமதுரை மகளிர் காவல்துறையினரிடம் புகார் செய்திருந்தார்.

அப்போது போலீசார் ராஜசேகரை கண்டித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் கணவன் மனைவி இருவரும் பூத்தாம்பட்டியில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த சூழலில் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் தேவி, தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு 3 மகன்களை கூட்டிக்கொண்டு அரண்மனையூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மனைவியை சமாதானம் செய்ய அவரது வீட்டிற்கு, ராஜசேகர் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தேவியின் தாய் வேலைக்கு சென்றிருந்த போது, வீட்டில் இருந்த கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலியின் பேச்சை கேட்டு மனைவியை கொன்ற கணவன்

அப்போது ராஜசேகர் தேவியின் தலையை பிடித்து ஜன்னல் கம்பியில் மோதி கீழே தள்ளி, வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். அதன் பின் வீட்டில் இருந்த தனது மகன்களை தனது மோட்டார் சைக்கிளில் கூட்டிக்கொண்டு ராஜசேகர் தனது அம்மா வீட்டில் விட்டு விட்டு, தனது கள்ளக் காதலியான சரோஜாதேவியுடன் திருச்சிக்கு தப்பி சென்றுள்ளார்.

இதனை அடுத்து வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் ராஜசேகரின் தொலைபேசி மூலம், திருச்சியில் இருப்பது கண்டுபிடித்தனர். பின்னர் திருச்சி விரைந்த தனிப்படை காவல்துறையினர், ராஜசேகர் மற்றும் கள்ளக்காதலி தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் சரோஜாதேவி, “நான் தான் ராஜசேகரை என்னுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால், முதலில் உன் மனைவியை கொலை செய்துவிட்டு வா அப்போது இருவரும் சந்தோஷமாக வாழலாம்” என்று கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனால் தான் மனைவியை கொலை செய்ததாக ராஜசேகரும் ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கள்ளக்காதல் தொடர்பால் மனைவியை கொலை செய்து விட்டு மூன்று குழந்தைகள் நடுரோட்டில் நிற்கும் அவலம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க:கள்ளகாதலர்களோடு சேர்ந்து முதியரை கொன்ற பெண்... நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details