தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தவருக்கு அடி உதை - Dindigul

கொடைக்கானலில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை மறுமணம் செய்தவர் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஊர்த்திருவிழாவில் தாக்கப்பட்டார்.

கொடைக்கானலில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த நபருக்கு ஊர்த்திருவிழாவில் அடி உதை.
கொடைக்கானலில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த நபருக்கு ஊர்த்திருவிழாவில் அடி உதை

By

Published : May 11, 2022, 12:23 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் கிராமத்தில் நடந்த
திருவிழாவில், மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த நபரை
பெண்ணின் அண்ணன் சராமரியாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கணவனை இழந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை தன்ராஜ் என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நபர், மறுமணம் செய்து மூன்று ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்து வருகிறார். அதனால் கோபமடைந்த பெண்ணின் அண்ணன் பூவேந்திரன், தங்கையின் கணவரை ஊர்த் திருவிழாவில் மாடு விடும் போட்டிக்கு மறைமுகமாக அழைத்து, அதில் மாடு விட்ட தன்ராஜை எங்கள் ஊரில் வெளிஊர் மாட்டை எப்படி விடலாம் என வம்பிழுத்து வன்மத்துடன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தன்ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பூவேந்திரன் உட்பட நான்கு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு, உறவினர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details