திண்டுக்கல்:கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு இந்த ஊரடங்கில் உணவுப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்க கொடைக்கானலில் ஹில்டாப் நிறுவனம் சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஹில்டாப் கடைகளுக்கு முன்னால், பிரட்டுகள் அடங்கிய தொகுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை வாங்கவரும் பொதுமக்கள் தாங்களாகவே பணத்தை அருகிலுள்ள பெட்டியில் போட்டுவிட்டு பொருள்களை எடுத்துக்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.