திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 9) காலை கடும் வெயில் காணப்பட்ட நிலையில், மாலை வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அதைத் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், செம்பட்டி, பெரியகோட்டை, கொடைக்கானல், பில்லமநாயக்கன்பட்டி, நத்தம், சித்தையன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியது.
திண்டுக்கல் முழுவதும் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி - dindigul hevey rain
திண்டுக்கல் : ஆத்தூர், செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
rain in dindigul
இதனிடையே, திண்டுக்கல் நகர் பகுதிகளில் இரவு முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், சோளம், கம்பு, சிறு தானிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.