திண்டுக்கல்:கொடைக்கானலில் (Kodaikanal)கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. பகல், இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாடு அரசு (Tamilnadu Government) சார்பில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.