தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலின மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க அரசு உதவி - to study medicine

பட்டியலின மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பினால் அரசு உதவி செய்யும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க அரசு உதவி
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க அரசு உதவி

By

Published : Jul 27, 2021, 1:07 PM IST

திண்டுக்கல்: ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெரும்பாறை பகுதியிலுள்ள பழங்குடியின நலத்துறையின் கீழ் இயங்கி வரும் உண்டு உறைவிடப் பள்ளியை அமைச்சர் கயல்விழி நேற்று (ஜூலை 26) ஆய்வு செய்தார்.

பள்ளியில் 153 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தற்போதைய நிலை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்து தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை வழங்கினார். அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆசிரியர்களுக்கு பாராட்டு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கயல்விழி, "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு சொந்தமாக மாவட்டத்தில் உள்ள நான்கு பள்ளிகளையும் ஆய்வு செய்தேன். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும்பாறை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நன்றாக படிக்கின்றனர். 11,12 ஆம் வகுப்புகளில் நல்ல தேர்ச்சி விகிதத்தை அளித்துள்ளனர். அதற்காக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.

வெளிநாடுகளில் மருத்துவம் - அரசு உதவி

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செல்வதில் ஆர்வம் இன்றி உள்ளனர். மாணவர்கள் படிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பட்டியலின மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பினால் அரசு அதற்கான உதவிகளை செய்து தரும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும், தமிழ்நாடு அரசு அதற்கான உதவிகளை செய்து தரும் என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் விரைவில் ஆங்கில வழிக்கல்வி - அமைச்சர் கயல்விழி

ABOUT THE AUTHOR

...view details