கோயம்புத்தூர்:துடியலூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா, இமானுவேல், கோகுல்ராஜ் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுக்கு உள்பட்ட மூன்று சிறுமிகளை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இவர்கள் ஆறுபேரும் மூன்று இருசக்கர வாகனத்தில், கடந்த மாதம் 27ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் மகள்கள் வீடு திரும்பாததால், சிறுமிகளின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மாயமான சிறுமிகளில் ஒருவர் துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார். அதன் அடிப்படையில் துடியலூர் காவல் துறையினர், திண்டுக்கல் தோமையார்புரம் விரைந்து, முகமது அலி ஜின்னா என்பவர் வீட்டில் பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.