தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கணும் சாமி’ - காவடி எடுத்த காயத்ரி ரகுராம் - பழனி முருகன் கோயில் சென்ற காயத்ரி

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் காவடி எடுத்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

By

Published : Oct 14, 2020, 4:37 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலத் தலைவரும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "இந்தியா முழுவதும் பாஜகவினரின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவிலான இளைஞர்கள் பாஜகவில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் பாஜகவில் இணைவது பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு கிடைக்கும் வரவேற்பினால்தான். சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதனை நான் பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், வரும் 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சியே அமையும்" என்றார்.

காவடி எடுத்த காயத்ரி ரகுராம்

இதையும் படிங்க:திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு குற்றவாளி விடுதலை - அரசு மேல்முறையீடு

ABOUT THE AUTHOR

...view details