திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சாணார்பட்டி பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் செல்ஃபோன்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நத்தத்திலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் ஒத்தக்கடை பாலம் அருகில் எஸ்.கொடையைச் சேர்ந்த குமார்(42) என்பவர் செல்கையில், அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வீதம் வந்த இளைஞர்கள் அவரிடம் இருந்த செல்ஃபோனை பறித்துக்கொண்டு தப்பினர்.
நத்தம் பகுதியில் மொபைல் திருடர்கள் கைது! - Complaint
திண்டுக்கல்: நத்தம் பகுதியில் பறக்கும் கேமரா, செல்ஃபோன்கள் திருடிய ஆறு பேர் கொண்ட கும்பலை வாகன தணிக்கையின்போது காவல் துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து சாணார்பட்டி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட குமார் புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சேகர், உதவி ஆய்வாளர்கள் சேக் அப்துல்லா, சாந்தா மற்றும் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைத் தேடி வந்தனர். இந்நிலையில், நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேரை மடக்கி காவல் துறையினர் விசாரணை செய்ததில், அவர்களிடமிருந்து 30 செல்ஃபோன்கள், பறக்கும் கேமரா(ட்ரோன்) ஒன்றையும் கைப்பற்றினர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நத்தம் வட்டாரத்தைச் சேர்ந்த தேத்தாம்பட்டி அஜய்(22), பூசாரிபட்டி சிவா(22), அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(22), அருள்முருகன்(22), பெருமாள்பட்டி ஸ்டாலின்(25), ஒரு சிறுவன் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.