கரோனா தொற்றுப் பரவலை இதனால், இன்று (மே.24) முதல் மே.31ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் - மதுரை நான்கு வழி சாலையில் உள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லை பள்ளபட்டி சோதனைச்சாவடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர், சுகாதார துறையினருக்கு மருத்துவ முகக் கவசங்கள், கபசுரக் குடிநீர் வழங்கினார்.
மாவட்டத்திற்கு உள்ளே வரும் வாகனங்கள் வெளியே செல்லும் வாகனங்களை உரிய ஆவணங்கள், இ-பதிவு ஆகியவைகளைச் சோதனை செய்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டுவரும் வாகனங்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றியும், இ- பதிவு, முறையான காரணங்கள் இன்றி வரும் வாகன ஓட்டிகளைதிருப்பி அனுப்பினர்.