தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் அனைத்து வசதிகளுடன் இலவசக் கல்வி; மாணவர்களுக்கு அழைப்பு!

திண்டுக்கல்: கொடைக்கானலில் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க எல்லா வசதிகளையும் இலவசமாகத் தருவதாக தலைமை ஆசிரியர் அறிவித்துள்ளார்.

மாணவர்களை அழைக்கும் தலைமை ஆசிரியர்
மாணவர்களை அழைக்கும் தலைமை ஆசிரியர்

By

Published : Oct 1, 2020, 9:56 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மூஞ்சிக்கல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்திருந்த நிலையில் இந்த வருடம் பள்ளியை தரம் உயர்த்துவதற்காகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அமல்ராஜ் முயன்றுவருகிறார்.

பள்ளியில் கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகள் முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல் தமிழ் வழியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலலாம் எனவும், டி.என்.சி., டி.என்.டி., பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. மாணவ மாணவிகளுக்கு தனி தனி விடுதி வசதியும், தினந்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த சத்தான உணவும், அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மேலும் கல்வி கற்க தேவையான அனைத்து புத்தகங்களும், கணினி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது.

மாணவர்களை அழைக்கும் தலைமை ஆசிரியர்

மேலும் தந்தை, தாய் இல்லாமல் இருக்கும் மாணவ மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனத் தலைமையாசிரியர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 32 மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details