தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவம் பயிலாமல் மருத்துவப் பணி செய்து வந்த செவிலியர் கைது! - crime news

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் மருத்துவம் பார்த்து வந்த செவிலியரை காவல் துறையினர் கைது செய்தனர்.

fraud doctor
கரோனா தடை உத்தரவை மீறிய போலி மருத்துவர்-கைது செய்த காவல் துறையினர்

By

Published : May 29, 2021, 8:00 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகினி (56). இவர் செவிலியர் படிப்பு முடித்துள்ளார். இவர் முறையாக மருத்துவப் படிப்பு படிக்காமல், பொதுமக்களை ஏமாற்றி முறையற்ற சிகிச்சை பார்த்து வந்ததாகவும், இதனால் சில மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அரசு விதித்துள்ள கரோனா விதிமுறைகளை மீறி, அதிக மக்களை கூட்டமாக வைத்து இவர் மருத்துவம் பார்த்ததாகவும் கொடைக்கானல் வட்டாட்சியர் காவல் நிலைத்திற்கு புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையிலான காவல் துறையினர், மோகினியை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து மருந்து மாத்திரைகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தியும் வருகின்றனர். மேலும், போலி மருத்துவம் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கட்சி பிரமுகர் கைது!

ABOUT THE AUTHOR

...view details