திண்டுக்கல்:கொடைக்கானலில் உள்ள ஏழு வனச்சரகங்களிலும் வனச்சரகர் தலைமையில் வனவர்கள், வனப்பணியாளர்கள் உட்பட 100-க்கும் மேலானோர் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணியானது, தொடர்ந்து ஒரு வாரம் நீடிக்கும்; தேவைப்பட்டால் மேலும் சில நாள்கள் தொடரப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் மொத்தம் 9 குழுக்களாக ஈடுபட்டு உள்ளனர். கொடைக்கானலில் காட்டெருமைகள், மான்கள், கேளை ஆடு, சருகுமான், புலி, சிறுத்தை, குரங்குகள், செந்நாய், புலி, யானை, பன்றி உள்ளிட்ட விலங்குகள் எவ்வளவு உள்ளன என்பது பற்றி இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும்.