சென்னை வானிலை ஆய்வு மையம்,ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளுக்கு தமிழ்நாட்டில்புயல் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான பேரிஜம் ஏரி, மோயர் பாயின்ட், குணா குகை, பில்லர் ராக், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு புயல் ஏற்படும் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புயல் அறிவிப்பு: கொடைக்கானல் வனப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை! - ban
திண்டுக்கல்: புயல் அறிவிப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் வனப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வனத் துறை தடை விதித்துள்ளது.
புயல் ஏற்படும் நேரங்களில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி அறிவுறுத்தலின்படி சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் ஏப்ரல் 29, 30ஆகிய தேதிகளில் கொடைக்கானல் வனப்பகுதிகளுக்குள் செல்ல வனத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் போல் ஏற்படாமல் தவிர்க்க இவ்விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.