திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்லூரி விடுமுறைக் காலம் என்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தருவர். வருடந்தோறும் மே மாதம் தொடர்ந்து 10 நாட்கள் கோடை விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சியும் நடைபெறும். இக்கண்காட்சி சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் பல்வேறு வண்ண மலர்கள் அணிவகுத்தபடி அமைத்திருப்பர்.
தேர்தலால் தள்ளி போன மலர் கண்காட்சி! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
திண்டுக்கல்: தேர்தல் காரணமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் எனச் சுற்றுலாத் துறை அலுவலர் உமாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல்
ஆனால், இவ்வாண்டு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளிவரும் என்பதால், தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் கொடைக்கானலில் நடைபெற இருக்கும் 58வது கோடை விழா, பிரையண்ட் பூங்காவில் நடைபெரும் மலர் கண்காட்சி வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று சுற்றுலா அலுவலர் உமாதேவி தெரிவித்துள்ளார்.