திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் அருகே புகையிலைப்பட்டிகுளம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இக்குளம் வறண்டு கிடந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாகத் தண்ணீர் நிரம்பியது.
இதையடுத்து அப்பகுதி மக்கள், அதில் சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள மீன் குஞ்சுகளை வாங்கி விட்டனர். தொடர்ந்து மீன்கள் நன்கு வளர்ந்த நிலையில், அங்கு தண்ணீர் வற்றியதால் இன்று(ஏப்ரல்.08) ஏராளமான கிராம மக்கள், சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் மீன்பிடித் திருவிழா நடத்தினர். இவ்விழாவில் அப்பகுதி மக்கள் கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சாவால் மீன்களைப் பிடித்தனர்.