திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொய்மலர் சாகுபடி உச்சத்தில் இருந்தது. கொடைக்கானல் பிரகாசபுரம், கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
அழிந்து வரும் நிலையில் கொய்மலர் சாகுபடி... - Kodaikanal Hills station
கொடைக்கானலில் அழிந்து வரும் கொய்மலர் சாகுபடியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளடைவில் கொய்மலர் சாகுபடி மெல்ல மெல்ல குறைந்து வந்து தற்போது முற்றிலும் அழியும் சூழலில் உள்ளது. முன்பு பல ஏக்கர் பரப்பளவில் கொய்மலர் விவசாயம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள விவசாயிகள் மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் வழக்கமாக விளைவிக்கக்கூடிய பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, பட்டாணி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு மாற்றாக இந்த கொய்மலர் சாகுபடி இருந்த வந்தது. எனவே கொய்மலர் சாகுபடி மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அமராவதி பாத யாத்திரையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த 79 வயது விவசாயி