தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒருங்கிணைந்த விவசாய பண்ணைத் திட்டம்: விவசாயிகளின் லாபம் பெருகும் - வேளாண்மைத் துறை

திண்டுக்கல்: அரசு கொண்டுவரப் போகும் ஒருங்கிணைந்த விவசாய பண்ணைத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் லாபம் அதிகரிக்கும் என வேளாண்த் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

விவசாய கண்காட்சி

By

Published : Aug 9, 2019, 4:24 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன விவசாயம் குறித்த கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர், வேளாண்த் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் இக்கண்காட்சியை தொடக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்த் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், " தமிழ்நாடு அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்த் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள சூழலில் விவசாயிகள் சந்திக்கும் மிகப்பெரிய சிரமம் ஆட்கள் பற்றாக்குறை தான். இப்பிரச்னையை களையும் வண்ணம், நவீன வேளாண் கருவிகள் மூலம் விவசாயம் செய்து விவசாயிகள் பயன்பெறுவதற்காக அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாய கண்காட்சி

இதேபோன்று, ஒருங்கிணைந்த விவசாய பண்ணைத் திட்டம் ஐந்து மாவட்டங்களில் செயல்படும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் விவசாயிகள் விவசாயத்தோடு கால்நடைகளுக்கான ஆடு, மாடு மற்றும் கோழி உள்ளிட்டவைகளை வளர்த்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளமுடியும்.

அதேபோல குறைந்த நீரில் வளரக்கூடிய கம்பு, திணை உள்ளிட்ட தானியங்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு உள்ளதால், அவற்றை அதிக அளவில் பயிரிட வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details