திண்டுக்கல்: கொடைக்கானலில் மேல்மலை மற்றும் கீழ்மலைக் கிராமங்களில் அதிக அளவில் விவசாயமே மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பல்வேறு காய்கறிகள் மட்டுமின்றி, பழ வகை விவசாயமும் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில், தற்போது அதிக அளவில் கொய்யா பழங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கொடைக்கானலில் பெய்து வரும் மழையின் காரணமாக கொய்யா பழங்களில் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.