தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் போலி பீடி பண்டல்கள் பறிமுதல்; இருவர் கைது - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்

திண்டுக்கல்லில் பிரபல பீடி கம்பெனியின் பெயரில் தயாரிக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.

போலி பீடி பண்டல்கள்
போலி பீடி பண்டல்கள்

By

Published : Aug 1, 2021, 10:44 PM IST

திண்டுக்கல்: மேட்டுப்பட்டி பேட்டை ரோட்டைச் சேர்ந்தவர்கள் அன்வர் அலி, ஜான்பாண்டியன். இவர்கள் இருவரும் போலி பீடிகள் தயாரித்து விற்பனை செய்வதாக, தெற்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

புகாரின் பேரில் இருவரது வீடுகளிலும் காவல்துறையினர் இன்று (ஆக. 1) சோதனை நடத்தினர். அப்போது பிரபல பீடி கம்பெனிகளின் பெயரில் போலியான லேபிள்களை தயாரித்து, போலி பீடி பாக்கெட்டுகளின் மீது ஒட்டப்பட்டது உறுதியானது.

பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடி பண்டல்கள்

இருவரின் வீடுகளிலிருந்தும் நான்கு மூட்டைகளில் சுமார் 100 கிலோ எடை கொண்ட பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பீடி பண்டல்களின் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட மாருதி காரும் பறிமுதல் செய்யபட்டன.

இதையும் படிங்க:முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைக்கும் - பேராசையால் ரூ. 3 லட்சத்தை இழந்த கர்ப்பிணி

ABOUT THE AUTHOR

...view details