திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அரிய புத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்.(வயது 51) இவர் தனக்கு குடும்ப பிரச்னை இருப்பதாக கூறி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் கிராம ஜோதிடர் சசிகுமார் (51) என்பவதரை அணுகியுள்ளார்.
அப்போது தங்கவேலிடம், உங்களது தோட்டத்தில் தங்கப் புதையல் உள்ளது. அதை எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய தங்கவேல், ஜோதிடர் சசிகுமார் கூறியபடி பூஜைகள் செய்துள்ளார். இதனிடையே சிறிது சிறிதாக அவ்வப்போது பணம் மற்றும் தங்க நகைகளை தங்கவேலிடமிருந்து ஜோதிடர் சசிகுமார் பெற்றுள்ளார்.
ரூ. 22 லட்சம் மற்றும் 45 சவரன் தங்க நகைகளையும் வாங்கி கொண்டவர் தனக்கு புல்லட், கார், செல்ஃபோன் வேண்டும் என கேட்டுள்ளார். அதன்படி புல்லட், செல்போன், ஒரு கார் ஆகியவற்றை விவசாயி தங்கவேல் ஜோதிடர் சசிகுமாருக்கு வாங்கி கொடுத்துள்ளார், ஆனால், பூஜைகள் செய்த ஜோதிடரோ புதையல் எடுத்து தரவில்லை.