திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - பழனி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே இயங்கிவரும் அரசு மதுபான கடையில், தமிழ்நாடு அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து மதுக்கடை உழியர்கள் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மதுப் பிரியர்கள் இக்கடையில் மது பாட்டில் வாங்கியபோது அதிக விலை சொன்னதால் மதுக்கடை ஊழியருக்கும், மதுப் பிரியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
மது பாட்டிலுக்கும் கூடுதல் விலை - குடிமகன்கள் போராட்டம்! - Liquor bottles are sold at high prices
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் - பழனி சாலையில் உள்ள மதுக்கடையில் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுப் பிரியர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, உரிய விலையில் மது விற்பனை செய்யக்கோரிசுமார் ஒருமணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது குறித்து மதுப் பிரியர் ஒருவர் கூறுகையில், 'கூலி வேலைக்குச் சென்றுவிட்டு உடல் வலிக்காக மது அருந்த வரும் ஏழை மக்களிடம் மது பாட்டிலுக்கு அதிக விலை கேட்கின்றனர். இது குறித்து மண்டல மேலாளருக்கும் தெரிந்திருந்தும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை’ என்றார்.