தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தை இறந்தபோதிலும் தேர்வு எழுத சென்ற +1 வகுப்பு மாணவன்! - Eleventh public exam

வேடசந்தூர் அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தனது பதினொன்றாம் வகுப்பு மாணவன் பொதுத் தேர்வை எழுதினார் .

தந்தை இறந்தபோதிலும் தேர்வு எழுத சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன்
தந்தை இறந்தபோதிலும் தேர்வு எழுத சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன்

By

Published : May 20, 2022, 10:37 PM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சவேரியார்பட்டியைச் சேர்ந்தவர் ரட்சகர். இவர் வேடசந்தூரில் சோபியா என்ற பெயரில் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் சோபியா என்ற மூத்த மகளும் ராபின் என்ற இளைய மகனும் உள்ளனர். சோபியா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் ராபின் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்றைய தினம் பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்த நிலையில், தனது தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த போதிலும் பொதுத்தேர்வை எழுதுவதற்காக ராபின், வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்.

அங்கு அவர் தனது பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்து விட்டு, பின்பு வீட்டுக்குச் சென்று தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுக் கொண்டு தனது தந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்தார்.

நாளை ஷோபியாவிற்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ள நிலையில், ’நான் நிச்சயமாக நாளை சென்று எனது பொதுத்தேர்வை நல்லபடியாக எழுதுவேன்’ என்று தெரிவித்தார்.

தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போதிலும் தங்களது அரசு பொதுத்தேர்வை நல்லபடியாக எழுதி தந்தையின் கனவை நிறைவேற்றுவோம் என்று கூறிய பிள்ளைகளை நினைத்து அப்பகுதியினர் மெய்சிலிர்த்தனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் - அமைச்சர் எ.வ. வேலு

ABOUT THE AUTHOR

...view details