தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இணைபிரியாத தம்பதி: ஒரேநாளில் கணவன், மனைவி உயிரிழப்பு - elderly couple die

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

elderly couple die
elderly couple die

By

Published : Aug 24, 2021, 11:23 AM IST

திண்டுக்கல்:பாரதிபுரம் சீட்டு கம்பெனி பகுதியில் வசித்துவந்தவர் பாபுலால் (57). அவரது மனைவி சாந்தி (51). இருவருக்கும் மகன், மகள் உள்ளனர். பாபுலால் எலக்ட்ரீசியன் வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22) உடல்நலக்குறை காரணமாக உயிரிழந்தார்.

இந்தச் செய்தியைக் கேட்ட அவரது மனைவி சாந்தி மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஒரேநாளில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதால், இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல சென்னை எர்ணாவூர் பகுதியில் கடந்த மாதம் தியாகராஜன் (63) என்பவர், தனது மனைவி ராஜலட்சுமி (53) உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சாவிலும் இணைபிரியாத தம்பதி!

ABOUT THE AUTHOR

...view details