தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-பதிவு கட்டாயம்: 600 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

திண்டுக்கல்: இன்று (மே.20) இ-பதிவு இல்லாமல் சுற்றித் திரிந்த நபர்களின் 600 இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இ-பதிவு கட்டாயம்: 600 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
இ-பதிவு கட்டாயம்: 600 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

By

Published : May 20, 2021, 2:55 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை பரவி நாள்தோறும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் - கரூர், பழனி, மதுரை, திருச்சி புறவழிச்சாலைகள் என 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி நகருக்குள் உள்ளே வரும் நபர்களைக் கண்காணித்து வருகின்றனர்.

600 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

மேலும் இ-பதிவு இல்லாமல் உள்ளே நுழையும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை காவல் துறையினர் அனுமதிப்பதில்லை. இ-பதிவு நடைமுறைக்கு வந்த கடந்த இரண்டு தினங்களில் தேவை இல்லாமல் சுற்றித் திரிந்த 600 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details