திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காவல் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சிவராசு. இவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததால் ஆகஸ்ட் 3ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள விடுமுறை அளித்து காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. ஆனால் ஆகஸ்ட் 4ஆம் தேதி சார்பு ஆய்வாளர் சிவராசு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், தாண்டிக்குடி செல்லும் வழியில் கே.சி. பட்டி மலைக் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் தகராறு செய்து ஒருவரைத் தாக்கியுள்ளனர். இதில் அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சார்பு ஆய்வாளர், அவரது நண்பர்களை பெரும் பாறை என்ற இடத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரவிலி பிரியா, சிவராசுவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளார். தற்போது சார்பு ஆய்வாளர் சிவராசுக்கு கரோனா பரிசோதனை முடிவு பாஸிட்டிவ் என வந்ததையடுத்து கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுக்கடையில் மது அருந்திய காவலர்: காணொலி வைரல்