தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்று நடவடிக்கைக்காக திமுக வேட்பாளரை நிறுத்த வலியுறுத்தினேன் - வைகோ - தேர்தல்

திண்டுக்கல்: மாநிலங்களவை உறுப்பினருக்கான எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று நடவடிக்கை தேவை என்ற அடிப்படையில், திமுக வேட்பாளரை நிறுத்த வலியுறுத்தியதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

vaiko

By

Published : Jul 8, 2019, 3:24 PM IST

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னோடு தொடர்பு கொண்டு பேசினார். அதில் நீங்கள் மாநிலங்களவை உறுப்பினராக வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தால் மதிமுகவிற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூறினார். அவர் விருப்பத்தின் பேரில் நான் வேட்பு மனு தாக்கல் செய்தேன். ஏனெனில், தேச துரோக வழக்கில் எனக்கு எதிராக தீர்ப்பு வராது என்ற நம்பிக்கையில் நான் இருந்தேன், சுதந்திர இந்தியாவிலேயே தேச துரோக வழக்கில் தண்டிக்கப்படும் முதல் நபராக நான் உள்ளேன் எனத் தெரிவித்தார்.

மகாத்மா காந்திக்கு எதிராகவும் கோட்சேவுக்கு ஆதராவாகவும் பேசி செயல்படுபவர்கள் தற்போது தேச பக்தர்களாக கருதப்படுவதாகவும், அதே வேலை தன்னை தேச துரோகி என்று கூறிவருவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
என்னுடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புவதாகவும், ஒரு வேளை எனது மனு நிராகரிக்கப்பட்டால் எனக்கு மாற்றாக திமுகவை வேட்பாளரை நிறுத்த நான் வற்புறுத்தியதாக வைகோ கூறினார்.

வைகோ பேட்டி

எனது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் திமுக வேட்பாளர் இளங்கோ மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வார் எனவும், ஒரு வேளை எனது வேட்புமனு ஏற்கப்படாவிட்டால் இளங்கோ போட்டியிடுவர் என்று தெரிவித்தார். எனவே இதுகுறித்து தேவையில்லாத குழப்பங்களையும், விவாதங்களும் கட்சி தொண்டர்களிடையே இருக்க வேண்டாம் என, வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details